Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”அலப்பறை கெளப்புறோம்”; சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்!

Webdunia
ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:30 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் இன்று வரை சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ள டேவிட் வார்னர் இந்திய பாடல்களுக்கு டிக்டாக் செய்வதன் மூலம் இந்திய ரசிகர்களிடையே தனக்கான இடத்தையும் பிடித்துள்ளார்.

நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந்து வரும் டேவிட் வார்னர் தற்போது ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்ற நிலையில் களமிறங்கிய டேவிட் வார்னர் நிதானமாக விளையாடி சதத்தை ஈட்டினார்.

இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வார்னரின் 20வது சதம் ஆகும். மேலும் சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகைகளிலும் மொத்தமாக 46 சதங்களை வீழ்த்தியுள்ளார் வார்னர். முன்னதாக சச்சின் டெண்டுல்கர் ஈட்டிய 45 சர்வதேச சதங்களின் சாதனையை இதன்மூலம் முறியடித்துள்ளார் டேவிட் வார்னர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடரின் பாதியிலேயே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா.. அஸ்வினுக்கு நேர்ந்த அவமரியாதை!

ரோஹித் ஷர்மாவும் ஓய்வு முடிவை அறிவிப்பார்… சுனில் கவாஸ்கர் ஆருடம்!

தோனி செய்த தவறையே அஸ்வினும் செய்துள்ளார்… கவாஸ்கர் கருத்து!

உங்கள் வளர்ச்சியை பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது… அஸ்வின் குறித்து கம்பீர் எமோஷனல்!

நீங்க எப்போதும் ஒரு லெஜண்டாக நினைவு கூறப்படுவீர்கள்… அஸ்வின் குறித்து கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments