Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாரன் பிராவோ திடீர் விலகல்

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் டாரன் பிராவோ திடீர் விலகல்
, வியாழன், 20 நவம்பர் 2014 (15:36 IST)
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தென்ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளனர்.
 
சமீபத்தில் இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள், ஊதிய சர்ச்சைக் காரணமாக தொடரை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பினர். இதன் காரணமாக எழுந்த சர்ச்சையால் அந்நாட்டுடன் போட்டி தொடர்களை ரத்து செய்யவுள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம்.
 
இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளது. இதற்காக வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள் என்று வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. எனினும் தனிப்பட்ட காரணங்களால் இப்போட்டி தொடரிலிருந்து டாரன் பிராவோ விலிகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil