Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிட்டுக்கு பதில் அவரை டி 20 அணிக்கு பயிற்சியாளராக நியமிக்க வேண்டும்… முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
புதன், 9 ஆகஸ்ட் 2023 (12:14 IST)
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி டி 20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்று மூன்றாவது போட்டியை மட்டும் வென்றுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மெதுவாக செயல்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்திய அணி இன்னும் வெற்றிக்கான உத்வேகத்தைக் காட்டவேண்டும். அதற்கு பயிற்சியாளரின் பங்கு மிக அவசியம்.  இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சிறந்த வீரர். ஆனால் டி 20 பார்மெட்டுக்கு அவர் சரியான நபர் கிடையாது. ஆஷிஷ் நெஹ்ரா பரபரப்பாக செயல்பட்டு வீரர்களுக்கு செய்திகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கு இந்த பார்மட்டில் வாய்ப்பு வழங்கப்படவேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருத்ராஜ் வருகிறார்.. மினி ஏலத்தில் ஓட்டைகளை நிரப்பி விடுவோம்: சிஎஸ்கே குறித்து தோனி..!

அடுத்த 5 ஆண்டுகளுக்கு விளையாட முடியும்.. ஆனால்? தோனி வைத்த ட்விஸ்ட்! - ரசிகர்கள் அதிர்ச்சி!

கவாஸ்கர் சாதனை நூலிழையில் தவறவிட்ட கில்.. இருப்பினும் நெகிழ்ச்சியுடன் கிடைத்த பாராட்டு..!

கடைசி நேரத்தில் அபார அரைசதம் அடித்த வாஷிங்டன் சுந்தர்.. இங்கிலாந்துக்கு இலக்கு எவ்வளவு?

ஆசியக் கோப்பை தொடரிலும் பும்ரா இருக்க மாட்டாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments