Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே அணிக்குப் பெரும் பின்னடைவு… முக்கிய வீரர் காயத்தால் அவதி!

vinoth
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:23 IST)
ஐபிஎல் மினி ஏலம் கடந்த ஆண்டு இறுதியில் துபாயில் நடைபெற்ற நிலையில் இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரச்சின் ரவீந்தரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. இதில் மிட்செல்லை யாரும் எதிர் பார்க்காத வகையில் 14 கோடிக்கு எடுத்து ஆச்சர்யத்தைக் கொடுத்தது. இவர்கள் இருவருமே நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி இருந்தனர்.

ஐபிஎல் தொடர் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ள நிலையில் இப்போது 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டேரில் மிட்செல் காயம் காரணமாக இப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரின் காயம் தீவிரமாக உள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் முழுவதும் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை அவர் விளையாடாத பட்சத்தில் சி எஸ் கே அணியின் நடுவரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றியுடன் விடைபெற்றார் நியுசிலாந்தின் டிம் சவுத்தீ!

உணவு இடைவேளையின் போது பயிற்சி மேற்கொண்ட கோலி…!

கடைசியில் மழைதான் இந்தியாவ காப்பாத்தும் போல இருக்கு… மீண்டும் தடைபட்ட போட்டி!

பாதியிலேயே போட்டியில் இருந்து விலகிய ஹேசில்வுட்… இந்திய அணிக்கு ஆறுதல்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளர் ஆன டேரன் சமி!

அடுத்த கட்டுரையில்
Show comments