Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்கெட் எடுத்தா ஏன் சாமி கும்பிடுறீங்க..? – பதில் சொன்ன பதிரனா!

Webdunia
ஞாயிறு, 7 மே 2023 (06:51 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா விக்கெட் வீழ்த்தும்போது செய்யும் செய்கை குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான El Classico போட்டியில் மும்பை அணியை சொந்த மண்ணில் வைத்து வென்றது சிஎஸ்கே. 13 ஆண்டுகளுக்கு பிறகு இதை சென்னை அணி சாதித்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணி இளம் பந்து வீச்சாளர் மதிஷா பதிரனாவின் விளையாட்டு பலரை கவர்ந்துள்ளது.

மலிக்கா போல சைடு வாக்கில் பந்து வீசும் அவரது ஸ்டைலுடன், விக்கெட்டுகள் வீழ்ந்ததும் நெஞ்சில் கை வைத்து, வானத்தை நோக்கி வேண்டுவது போன்ற அவரது உடல் மொழியும் பலரை ஈர்த்துள்ளது.

நேற்றைய போட்டியில் பதிரனா மும்பையின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுவும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பதிரானா நேற்றைய போட்டியின் ஆட்டநாயகனாக தேர்வானார்.



விக்கெட் வீழ்த்திய பின் தான் செய்யும் உடல்மொழி குறித்து பேசிய பதிரனா “நான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகன். அதனால் விக்கெட் வீழ்த்தியபின் அவர் கோல் அடித்த பிறகு செய்வது போல செய்கிறேன்” என கூறியுள்ளார். மேலும் இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் நிறைய முறை விளையாட கிடைத்துள்ள வாய்ப்பு குறித்தும் பதிரனா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குழந்தை போல அருகில் உட்கார்ந்து சொல்லிக் கொடுக்க முடியாது… பிரித்வி ஷா குறித்து ஸ்ரேயாஸ் ஐயர்!

பும்ரா குறித்த இனவாத கமெண்ட்… மன்னிப்புக் கோரிய வர்ணனையாளர் இஷா குஹா!

சச்சினைப் பார்த்து கத்துக்கோங்க… ஒரே மாதிரி அவுட் ஆகும் கோலிக்கு ரசிகர்கள் அறிவுரை!

3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியாவின் ஸ்கோர் என்ன? நம்பிக்கை நட்சத்திரமாக கே.எல்.ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments