Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோத்தாலும் “தல” செய்கை வேற லெவல்! – தோனி ஆட்டத்தால் வாய்பிளந்த ரசிகர்கள்!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (09:07 IST)
நேற்று நடந்த முதல் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவினாலும் தோனியின் ஆட்டத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

2022ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் நேற்று தொடங்கிய நிலையில் முதல் ஆட்டமாக சிஎஸ்கே – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இடையே போட்டி நடந்தது. முதல்முறையாக சிஎஸ்கே அணிக்கு ஜடேஜா கேப்டனாக உள்ள நிலையில் நடக்கும் போட்டி இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை குவித்தது. ஆரம்பம் முதலே சென்னை அணியின் ரன்கள் குறைவாக இருந்த நிலையில் கடைசி கட்டத்தில் களம் இறங்கிய முன்னாள் கேப்டன் தோனி 7 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசி அரை சதம் வீழ்த்தினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தோனி ஐபிஎல்லில் அடிக்கும் முதல் அரைசதம் இது.

இரண்டாவதாக பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19வது ஓவரிலேயே 133 ரன்களை ஈட்டி வெற்றி பெற்றது. எனினும் நேற்றைய ஆட்டத்தில் தோனி வெளிப்படுத்திய அபாரமான ஆட்டம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சன் எங்கயும் போகலியாம்… சென்னை ரசிகர்கள் ஆர்வத்தைக் கிளப்பி இப்படி பண்ணிட்டாங்களே!

தொடர்நாயகன் விருதுக்கு ரூட்தான் சரியானவர்… கம்பீரின் முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை- ஹார் ப்ரூக்!

டி20 போட்டியில் 650 விக்கெட்.. ஆப்கன் வீரர் ரஷித்கான் புதிய சாதனை

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

அடுத்த கட்டுரையில்
Show comments