சிஎஸ்கே ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான ரெய்னா… அப்படி என்ன செய்தார்?

Webdunia
திங்கள், 29 மே 2023 (07:26 IST)
சிஎஸ்கே அணியில் இடம்பெற்றவரை தோனிக்கு அடுத்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சுரேஷ் ரெய்னாதான். அவரை சின்னத்தல என்றே ரசிகர்கள் போற்றி புகழ்ந்துவந்தனர். அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெகு சீக்கிரமாக ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்தது. ஓய்வு பெற்றாலும் எப்போதும் சென்னை அணியின் செல்லப்பிள்ளையாகவே அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவர் மீது சி எஸ் கே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட ஐபிஎல் அணியை அவர் அறிவித்திருந்தார். அதில் அவர் தோனிக்கு அவர் இடமளிக்கவில்லை. அதனால்தான் இப்போது சிஎஸ்கே ரசிகர்கள் அவரைக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.

ரெய்னா அறிவித்த ஐபிஎல் 2023-ன் சிறந்த அணி
ஹர்திக் பாண்டியா ( கேப்டன்), ஜெய்ஷ்வால், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், நிக்கோலஸ் பூரான் ( விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஜடேஜா, முகமது ஷமி, முகமது சிராஜ், சாஹல்
கூடுதல் வீரர்கள்  
கேமிரான் கிரீன், யாஷ் தாக்கூர், ருதுராஜ் கெய்க்வாட், பதிராணா, ஜித்தேஷ் சர்மா 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 நாட்களில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவுக்கு $3 மில்லியன் இழப்பு..!

ஆஷஸ் முதல் டெஸ்ட்.. ஆஸ்திரேலியா அபார வெற்றி.. 10 வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட ஸ்டார்க்..!

2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து ஆல்-அவுட்.. ஆஸ்திரேலியா வெற்றி பெற டார்கெட் எவ்வளவு?

2வது நாளே 2வது இன்னிங்ஸ்.. இன்று அல்லது நாளை முடிந்துவிடுமா ஆஷஸ் முதல் டெஸ்ட்..!

கௌகாத்தி டெஸ்ட்… டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments