அதிரடி சரவெடி ஆட்டம்.. ப்ளே ஆப்க்கு முன்னேறிய சிஎஸ்கே, லக்னோ அணிகள்!

Webdunia
ஞாயிறு, 21 மே 2023 (04:46 IST)
நேற்றைய ஐபிஎல் லீக் போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ அணியும் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

ஐபிஎல் 16வது சீசனில் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. அணிக்கு தலா 14 போட்டிகள் என்ற கணக்கில் 14வது போட்டி வரை ப்ளே ஆப்க்கு தகுதி பெறும் அணிகள் குறித்த இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

நேற்று பிற்பகல் நடந்த போட்டியில் டெல்லி அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி ப்ளே ஆப் சுற்றுக்கு இரண்டாவது அணியாக தகுதி பெற்றது.



அதை தொடர்ந்து மாலையில் நடந்த லக்னோ – கொல்கத்தா அணிகள் இடையேயான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்ற லக்னோ அணி 3வது அணியாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்றுள்ளது.

நான்காவது இடத்திற்கு மட்டும் போட்டி நிலவி வரும் நிலையில் இன்று நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி – குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் போட்டி முடிவுகளை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமண ஒத்திவைப்புக்கு பின் ஸ்மிருதி மந்தனாவின் முதல் இன்ஸ்டா போஸ்ட்.. மோதிரம் மிஸ்ஸிங்?

சதம் அடிக்காவிட்டால் நிர்வாணமாக நடப்பேன்: தந்தையின் சவாலுக்கு ஹைடன் மகள் கூறியது என்ன?

சச்சின் படைக்காத 3 டெஸ்ட் சாதனைகள்: ஜோ ரூட் முறியடித்தது எப்படி?

ரோஹித் ஷர்மா, விராட் கோலியை வைத்து குழப்பம் செய்யாதீர்கள்: ரவி சாஸ்திரி கண்டனம்..!

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments