Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இந்தியாவில் கிரிக்கெட் என்பது’’ . நடராஜனை சுட்டிக்காட்டி ..ஷேவாக் விளக்கம்

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (21:51 IST)
நடராஜனை சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது சொந்த ஊரை சேர்ந்த சின்னப்பம்பட்டி ஊர்மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்தனர். இதுகுறித்து ‘’இந்திய நாட்டில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல..அதற்கு மேல் ’’என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சேவாக் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் நெட் பந்து வீச்சாளராக சென்றவர் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன். ஆனால் அடுத்தடுத்து முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதால் முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று, அதன் பின்னர் டி20 போட்டிகளில் பந்துவீச்சில் அசத்திய நடராஜனுக்கு நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

 
இதனை அடுத்து ஒரே தொடரில் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் சர்வதேச போட்டிகளில் நடராஜன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தமிழகம் திரும்ப இருக்கும் நடராஜனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது சொந்த ஊரை சேர்ந்த சின்னப்பம்பட்டி ஊர்மக்கள் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அதன்படி நடராஜன் சேலம் மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான சின்னப்பட்டிக்கு காரில் வந்த போது, அவரது ஊரார் திருவிழா போன்று ஒன்று கூடி அவரை அன்பு ததும்ப வரவேற்றுள்ளனர்.

ஊரார் செண்டை மேளத்திற்கு ஏற்பாடு செய்யவே நடராஜன் சாரட் வண்டியில் கையில் கிளவுஸ் மற்றும் முகத்தில் மாஸ்குடம் உற்சாகக் காணப்பட்டார். அனைவரும் தங்களது வீட்டில் ஒருவர் சாதித்துள்ளதாக நினைத்து நடராஜனின் சாதனையை பெருமை பொங்கப் பேசி வருகின்றனர்.

தங்கள் ஊரை உலகம் முழுவதும் பிரபலம் அடையச் செய்த நடராஜனைப் போன்று இளைஞர்கள் அனைவரும் முயன்றால் முன்னேறி சாதிக்க முடிவும் என்பதற்கு நடராஜன் சிறந்த உதாரணமாக உள்ளார்.

இதுதான் இந்தியா இந்திய நாட்டில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல..அதற்கு மேல் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சேவாக் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். #Virender Sehwag,

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

இதுதான் இந்தியா இந்திய நாட்டில் கிரிக்கெட் வெறும் விளையாட்டு அல்ல.. நடராஜனின் வெற்றி என்பது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது என்று இன்று நடராஜன் ஊரான சின்னப்பம்பட்டியில் அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு வீடியோவைப் பதிவிட்டு அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments