Webdunia - Bharat's app for daily news and videos

Install App

9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2014 (10:46 IST)
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை சுலபமாக வீழ்த்தி வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணியை பேட் செய்ய பணித்தார். இதில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

கட்டாய வெற்றியை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள், மைக் ஹஸ்சியும், லென்டில் சிமோன்சும் சிறப்பான தொடக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்து அசத்தினர். பின்னர் மைக் ஹஸ்சி 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் பொல்லர்ட் தொடர்ந்து இரு சிக்சர்கள் அடித்து ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் மும்பை அணி தனது கடைசி லீக் ஆட்டத்தை, நியூசிலாந்தின் நார்தன் டிஸ்டிரிக்ஸ் அணியை எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் தொடரில் தோனி கூட படைக்காத சாதனையை கேப்டனாக படைத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஐபிஎல் நிர்வாகம்… இவ்ளோ லேட்டாவா விருது வழங்குவது?

“இந்திய அணிக்கு போகாதீங்க… எங்க கூடவே இருங்க”- கம்பீருக்கு ப்ளாங்க் செக் கொடுத்த ஷாருக் கான்?

தோனியின் முக்கியமான சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இழந்த பேட் கம்மின்ஸ்!

மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?

Show comments