Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: மும்பை இந்தியன்ஸ் - நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் பலப்பரிட்சை

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (10:14 IST)
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணிகள் மோதுகின்றன.

6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கவுள்ளது. இதில் செப் 16, 2014 ( இன்று ) நடைபெறும் தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணிகள் மோதவுள்ளன.

10 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய இரண்டு அணிகள் தகுதி சுற்று மூலம் முடிவாகும். தகுதி சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், நார்தர்ன் டிஸ்ட்ரிக்ஸ், சதர்ன் எக்ஸ்பிரஸ், லாகூர் லயன்ஸ் ஆகிய அணிகள் மோதி வருகின்றன.

இதில் சதர்ன் எக்ஸ்பிரஸ் அணி முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணியிடமும், 2 ஆவது ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடமும் படு தோல்வி அடைந்தது.

லாகூர் லயன்ஸ் அணி முதல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 2 ஆவது ஆட்டத்தில் நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணியிடம் 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் புள்ளி பட்டியலில் 3 ஆவது இடத்தில் இருக்கும் லாகூர் லயன்ஸ் அணி செப் 16, 2014 ( இன்று ) நடைபெறும் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதான சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.

மாலை 4 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் சதர்ன் எக்ஸ்பிரஸ் -  லாகூர் லயன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. மேலும் 8 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

நார்தன் டிஸ்ட்டிரிக்ஸ் அணி விளையாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன்காரணமாக பிரதான சுற்று வாய்ப்பை உறுதி செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

Show comments