Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் பலப்பரீட்சை

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் பலப்பரீட்சை
, வெள்ளி, 19 செப்டம்பர் 2014 (10:42 IST)
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் ராய்ப்பூரில் மோதவுள்ளன.

ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பின்னர் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது. இதில் இந்தியாவின் முன்னணி ஐ.பி.எல். அணிகளும் தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த உள்ளூர் அணிகளும் போட்டிகளில் பங்கு பெறும்.

ஒட்டுமொத்தமாக 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இன்றைய ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் – நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணிகள் ராய்ப்பூரில், தங்கள் அணிகளின் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த காத்துக்கொண்டிருக்கின்றன.

கேப்டன் ஜஸ்டின் ஆன்டாங் தலைமையின் கீழ் கேப் கோப்ராஸ் அணியும், டேனியல் பிளைன் தலைமையின் கீழ் நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியும் களாமிறங்கவுள்ளன.

கேப் கோப்ராஸ் அணியில் அம்லா, பீட்டர்சன், ஜஸ்டின் கெம்ப், ரிச்சர்ட் லெவி போன்ற நட்சத்திர ஆட்டகாரர்கள் உள்ளனர். நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணியை எடுத்துக்கொண்டால் வில்லியம்சன், டிம் சவுதி, வாட்லிங் போன்ற சிறந்த வீரர்களை இவ்வணியும் தன் வசம் கொண்டுள்ளது.

நார்தன் டிஸ்ட்ரிக்ஸ் அணி தனது தகுதி சுற்று  லீக் ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil