Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் போட்டி: கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் வெற்றி

Webdunia
திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:42 IST)
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த லீக் ஆட்டங்களில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
 
6 ஆவது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் செப், 17 அன்று தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
 
இந்நிலையில் செப் 21( நேற்று ) நடைபெற்ற 6 ஆவது லீக் ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் - ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய கேப் கோப்ராஸ் அணி 184 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய ஹோபர்ட் அணி 19 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
 
இதைத்தொடர்ந்து நடைபெற்ற 7 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லாகூர் லயன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இதில் முதலில் பேட் செய்த லாகூர் லயன்ஸ் அணி 151 ரன்கள் எடுத்தது.
 
பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தங்கள் அணியின் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் கம்பீர் 60 ரன்கள் எடுத்தார். இதில் உத்தப்பா 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. எனினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஒரு வழியாக போராடி 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கனியை சுவைத்தது. இத்தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் 2 ஆவது வெற்றி இதுவாகும்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

Show comments