Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹியூக்ஸ் எனது இளைய சகோதரர்: மைக்கேல் கிளார்க்

ஹியூக்ஸ் எனது இளைய சகோதரர்: மைக்கேல் கிளார்க்
, புதன், 3 டிசம்பர் 2014 (15:19 IST)
பவுன்சர் பந்து தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸின் உடல் ஆஸ்திரேலியாவில் அடக்கம் செய்யப்பட்டது.
 
நடைபெற்ற இறுதி சடங்கில் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் ஹியூக்ஸ் குறித்து கூறுகையில், ஹியூக்ஸ்கு என்ன ஆனது என்பதே தெரியவில்லை. மேலும் அவரை எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பேன். அவரது ஆத்மா என்னுடன் எப்போதும் இருக்கும். 
 
ஹியூக்ஸ் விளையாடிய கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றேன். அவர் கீழே விழுந்த இடத்தின் புற்களை தொட்டேன். அப்போது அவர் எனக்குள் இருப்பதை உணர்ந்தேன். ஹியூக்ஸின் ஆத்மா என்னை ரன்கள் குவிக்க ஊக்குவிக்கும் என்றார். மேலும், ஹியூக்ஸ் எனது இளைய சகோதரர், அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil