Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போட்டியிலிருந்து கேப்டன் கிளார்க் ஓய்வு

Webdunia
சனி, 28 மார்ச் 2015 (09:54 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் உலகக் கோப்பை போட்டிகளுக்கு பின் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கிளார்க் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக டெஸ்ட் மற்றும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. மேலும் இதுபோன்ற பாதிப்புகளால் கிளார்க் உலகக் கோப்பை அணியில் இடம்பிடிப்பாரா என்ற சர்ச்சையும் அரங்கேறியது. ஒருவலியாக உலகக் கோப்பை அணியில் சேர்ந்த கிளார்க் தற்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், உலகக் கோப்பை போட்டிகளுக்கு பின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார். கிளார்க் பங்குபெறும் கடைசி போட்டி என்பதால் உலகக் கோப்பை மகுடத்தை வெல்ல ஆஸ்திரேலிய வீரர்கள் கடுமையாக முயற்சிப்பார்கள் என்பதில் சந்தேமில்லை. மேலும் 244 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிளார்க் இதுவரை 7907 ரன்களை சேகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

“தொடர்ந்து நான்காவது தோல்வி… வீரர்கள் அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” – சஞ்சு கேப்டன் ஆதங்கம்!

சி எஸ் கே அணியை விட்டு விலகுகிறாரா ஸ்டீபன் பிளமிங்? காசி விஸ்வநாதன் பதில்!

கேப்டன் சாம் கர்ரன் அபார பேட்டிங்.. பஞ்சாப் அணிக்கு ஆறுதல் வெற்றி..!

Show comments