Webdunia - Bharat's app for daily news and videos

Install App

600 சிக்சர்கள் அடித்து கிறிஸ் கெய்ல் உலக சாதனை

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2015 (11:42 IST)
20 ஒவர் கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 600 சிக்சர்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.


 
 
வங்காளசேதம் பிரீமியர் லீக் பேட்டியில் தற்போது பரிசால் புல்ஸ் அணிக்காக விளையாடி வரும் கிறிஸ் கெய்ல், 47 பந்தில் 92 ரன்கள் அடித்தார். இதில் 9 சிக்சர்கள் விளாசியுள்ளார். இன்று நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிக்காக களமிறங்கிய கெய்ல் 16 பந்தில் இரண்டு சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்து இருந்தார். இந்த இரண்டு சிக்சர்கள் அவருக்கு டி20 லீக் போட்டிகளில் 600வது சிக்சர்கள் ஆகும்.  டி20 லீக் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்து தொடர்ந்து முதல் இடத்திலும், 600வது சிக்சர் அடித்து உலகச் சாதனையும் படைத்துள்ளார்.
 
இவருக்கு அடுத்தபடியாக பொல்லார்டு 388 சிக்சர்களும், நியூசிலாந்து வீரர் பிராண்டன் மெக்கல்லம் 290 சிக்சர்களும் அடித்துள்ளனர். இந்திய வீரர்களில் ரெய்னா அதிகபட்சமாக 225 சிக்சர்களும், ரோகித் சர்மா 219 சிக்சர்களும் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments