Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்: அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் நீக்கம்

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2014 (16:12 IST)
வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்  கிரிக்கெட் தொடரில், தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல், தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் சேர்க்கப்படவில்லை.
 
இந்தியா வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி ஆகியவற்றில் பங்கேற்கவுள்ளது. இதில் முதல் ஒரு நாள் போட்டி வரும் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி கொச்சி நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில் காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்  கிறிஸ் கெய்லுக்கு, ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு தரப்பட்டுள்ளது. மேலும் சாமுவேல்ஸ், ஸ்மித் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் சொதப்பினாலும், ஒரு நாள் போட்டிகளில் எழுச்சி பெற்று சற்று ஆறுதல் அளித்தது. 
 
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் சிறப்பாக செயல்படும் வீரர்கள் பலர் உள்ளதால் இந்திய அணியின் செயல்பாட்டை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments