Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’சென்னை கிங்ஸ் வெற்றி பெற....உங்களைக் குறித்து யோசியுங்கள்’’ - தோனிக்கு ஷேவாக் அட்வைஸ்

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (20:25 IST)
இன்று நடைபெறும் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

கடந்த 7 போட்டிகளில் சென்னை அணி தற்போது முதல் முறையாக முதலில் பேட்டிங் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியில் ஜெகதீசனுக்கு பதிலாக பியூஸ் சாவ்லா களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மாவுக்கு பதிலாக நதீம் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில்  சென்னை அணியின் தோல்விக்கு அணியினரின் ஒத்துழைப்பின்மை, கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளதாக கேப்டன் தோனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தோனிக்கு ஒர் அறிவுரை கூறியுள்ளார்.

அதில், அணியிலுள்ள மற்ற வீரரக்ளைக் குறித்து யோசிப்பதை விடுத்து உங்களைக் குறித்து நீங்கள் யோசியுங்கள்… சென்னை அணி வெற்றி பெற நீங்களே டாப் ஆர்டரில் இறங்கி வேண்டும்…. மற்ற வீரர்களுக்கு பதில் நீங்கள் டாப் ஆர்டரில் இறங்கினால் அணி பெறச் சாத்தியம் உண்டு என ஒரு நிகழ்ச்சியில் அவர் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில், ஷேவாக், சென்னை அணி வீரர்கள் அரசாங்க ஊதியம் பெறுபவர்களைப் போலச் செயல்படுகின்றனர் என கடுமையாக விமர்சனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த முறை கால்குலேட்டர் உதவி இல்லாமல் ஆர் சி பி ப்ளே ஆஃப் செல்லும்.. சேவாக் கணிப்பு!

என்னய்யா தோனிய இப்படி அசிங்கப் படுத்திட்டாய்ங்க… நக்கல்யா உனக்கு ரஜத் படிதார்!

தோனியிடம் அப்படி சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை… முன்னாள் வீரர் குற்றச்சாட்டு!

பதீரனா வீசிய பவுன்சரை தலையில் வாங்கிய கோலி… அடுத்தடுத்த பந்துகளில் பறந்த பவுண்டரி!

சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்த தோனி… இது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

அடுத்த கட்டுரையில்
Show comments