ஆர் சி பி அணி என்னை ஏலத்தில் எடுக்காததால் கோபமானேன்… பிரபல கிரிக்கெட் வீரர் ஆதங்கம்!

Webdunia
செவ்வாய், 18 ஜூலை 2023 (07:19 IST)
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் சுழல்பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க அளவுக்கான சாதனைகளைப் படைத்துள்ள சஹால். ஆனால் சமீப சில மாதங்களாக அவருக்கு தேசிய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

ஐபிஎல் தொடரில் தற்போது ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சஹால், ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்துக்கு நகர்ந்துள்ளார். அவர் 187 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.

முதலில் ஆர் சி பி அணிக்காக ஆடிய சஹால், 2022 ஆம் ஆண்டு அந்த அணியால் கழட்டிவிடப்பட்டார். அதன் பின்னர் அவரை ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்தது. இதுபற்றி பேசியுள்ள அவர் “ஆர் சி பி அணிக்காக 8 ஆண்டுகள் விளையாடி, பல போட்டிகளை வென்று கொடுத்துள்ளேன். ஆனால் அவர்கள் ஏலம் பற்றி என்னிடம் தெளிவாக எதுவும் கூறவில்லை. அவர்கள் என்னை ஏலத்தில் எடுக்காததால் நான் கோபமடைந்தேன். பெங்களு மைதானம் எனக்கு மிகவும் பிடித்த மைதானம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் மெகா ஏலம் 2026: ரூ. 2 கோடி பட்டியலில் மதீஷா பதிரனா உள்பட 45 வீரர்கள்!

14 வயதில் 3 சதங்களை அடித்த உலகின் முதல் வீரர்.. வைபவ் சூர்யவன்ஷிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் இல்லை.. ஏலத்தில் பெயர் கொடுக்கவில்லை.. என்ன காரணம்?

தொடரும் விராத் கோலி - கெளதம் கம்பீர் மோதல்.. இந்திய அணிக்கு பின்னடைவு என எச்சரிக்கை..!

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments