WTC இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளதா? என்ன செய்ய வேண்டும்?

Prasanth Karthick
திங்கள், 4 நவம்பர் 2024 (09:38 IST)

நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை நழுவ விடும் ஆபத்தில் உள்ளது.

 

 

இந்தியா - நியூசிலாந்து இடையே நடந்த டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலுமே தோற்று பல ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணிலேயே வொயிட் வாஷ் ஆகி படுதோல்வியை சந்தித்துள்ளது இந்திய அணி. இதனால் உலகக்கோப்பை டெஸ்ட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பும் இந்தியாவுக்கு குறைந்துள்ளது.

 

உலகக்கோப்பை டெஸ்ட் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற வேண்டுமென்றால் இந்திய அணி தான் விளையாட இருக்கும் அடுத்த 5 போட்டிகளில் 4 போட்டிகளை கண்டிப்பாக வென்றாக வேண்டும். மொத்தமாக 5 போட்டிகளிலும் வெல்ல வேண்டும் அல்லது 4 போட்டிகளில் வெற்றியுடன் ஒரு போட்டியை ட்ரா செய்ய வேண்டும்.

 

ஒருவேளை மற்ற அணிகளின் வெற்றியை வைத்து இந்தியாவின் இறுதிச்சுற்று தகுதி நிர்ணயிக்கப்படுமானால் இந்திய அணி 2 போட்டிகளிலாவது வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும் இந்தியாவிற்கு சாதகமாக மற்ற அணிகளில் வெற்றி தோல்விகள் அமையும் என எதிர்பார்க்கமுடியாது.

 

ஒருவேளை இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவுடன் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் கூட வெல்லவில்லை என்றால் இறுதிப்போட்டி கனவாகவே முடியும்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் வீராங்கனைக்கு ரூ.2.5 கோடி.. அரசு வேலையும் உண்டு..!

4வது டி20 போட்டி.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.. 2-1 என முன்னிலை..!

உலகக்கோப்பையை வென்ற வீராங்கனைகள் அனைவருக்கும் அசத்தல் பரிசு.. டாடா மோட்டார்ஸ் அறிவிப்பு..!

இந்த வருஷமும் definitely not தான்… தோனி குறித்து அப்டேட் கொடுத்த காசி விஸ்வநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments