Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

vinoth
சனி, 24 மே 2025 (15:34 IST)
இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வை அறிவித்து விட்டதால் இன்று அறிவிக்கப்பட்டுள்ள அணியில் இளம் வீரர்கள் சிலருக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இளம் இந்திய அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 25 வயதாகும் ஷுப்மன் கில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா போன்ற அனுபவம் மிக்க வீரர்களுக்குப் பிறகு இந்திய அணியை வழிநடத்த உள்ளார். பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட வேண்டும் எனப் பலரும் கூறிய நிலையில் அவரின் உடற்தகுதிக் காரணமாக அவருக்கு பொறுப்பு அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இந்த தொடரில் பும்ராவின் பெயர் இடம்பெற்றிருந்தாலும் அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவது சந்தேகம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக பும்ரா ஆஸ்திரேலியா தொடரில் இருந்து வெளியேறி ஐபிஎல் தொடரின் பாதியில்தான் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments