Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது சாதனையை முறியடிக்கலாம்; ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் - பிரையன் லாரா

Webdunia
வியாழன், 20 நவம்பர் 2014 (16:19 IST)
எனது சாதனை முறியடிக்கப்படலாம் என்றும் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிப்பது கடினம் என்றும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா கூறியுள்ளார்.
 
இது குறித்து பிரையன் லாரா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், " ரோஹித் சர்மா 200 ரன்களை எடுத்த போது, அவர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இரண்டு முறை இரட்டை சதத்தை எட்டியுள்ளார் என்பதை கேள்விப்பட்டேன். ஆனால் இது போன்று அசாத்தியமான ஆட்டத்தை காண்பேன் என்று நான் அறிந்திருக்கவில்லை" என்று கூறியுள்ளார்.


 
மேலும் அவர் கூறுகையில்,"நாங்கள் அனைவரும் விவியன் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்திற்கு எதிராக மான்செஸ்டரில் 189 ரன்கள் எடுத்ததைப் பார்த்து வளர்ந்திருக்கிறோம். அப்போது அந்த உலக சாதனை சில காலங்களுக்கு முறியடிக்கப்படாமல் இருந்தது. ஆனால் அப்போதே 200 ரன்கள் எடுக்க முடியும் என்பதை உணர்ந்திருந்திருந்தேன். ரோஹித் சர்மாவின் சாதனை முறியடிக்கப்படும் என்று என்னால் கொஞ்சம்கூட நம்பமுடியவில்லை. இது ஒரு சிறந்த இன்னிங்க்ஸ்.
 

 
என்னுடைய 400 ரன் சாதனை முறியடிக்கப்படுமா என்று கேட்டால் டி-20 மற்றும் இளைஞர்களின் ஆட்டத்தைப் பார்க்கும் பொழுது முறியடிக்கப்படும் என்று நம்புகிறேன்.
 
டி-20 ஆட்டங்கள் இளைஞர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது என்று நினைக்கிறேன். ஏனென்றால் 200 - 250 ரன்களை அவர்கள் எளிதாக எடுக்கின்றனர்" என்று கூறினார்.

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

Show comments