Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெண்டுல்கர், கெய்ல் ஓபனிங்; தோனி, கோலிக்கு இடமில்லை - மெக்கல்லத்தின் லெவன் அணி

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2016 (18:02 IST)
நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் பிரண்டன் மெக்கல்லம் வெளியிட்டுள்ள 11 பேர் கொண்ட லெவன் அணியில் சச்சின் டெண்டுல்கர், கிறிஸ் கெய்ல் ஓபினிங் பேட்ஸ்மேனாக அறிவித்துள்ளார்.
 

 
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் அவர்கள் எப்போதைக்கும் தனது விருப்பத்திற்குரிய 11பேர் கொண்ட உலக அணியை பட்டியலிட்டுள்ளார். இதில், பிரண்டம் மெக்கல்லம் தனக்கு எதிராக விளையாடிவர்களின் அடிப்படையிலேயே இதனை தேர்ந்தெடுத்துள்ளார்.
 
இந்த அணிக்கு முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கேப்டனாக அறிவித்துள்ளார். இந்தியாவின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.
 
ரிக்கி பாண்டிங்கிற்கு 3ஆவது இடத்தையும், பிரையன் லாராவிற்கு 4ஆவது இடத்தையும், விவியன் ரிச்சர்ட்ஸ் அவர்களுக்கு 5ஆவது இடத்தையும், ஆல் ரவுண்டர் ஜாக் காலிஸ் அவர்களுக்கு 6ஆவது இடத்தையும், ஆடம் கில்கிறிஸ்ட் அவர்களுக்கு 7ஆவது இடத்தையும் மெக்கல்லம் வழங்கி உள்ளார்.
 
மேலும் மிட்செல் ஜான்சன், ஷேன் வார்னே, டிம் சவுத்தி, டிரெண்ட் போல்ட் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் அளித்துள்ளார். ஏபி டி வில்லியர்ஸ் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு இந்த அணியில் இடம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மா எந்த இடத்தில் இறங்கினால் சரியாக இருக்கும்… ரவி சாஸ்திரியின் கருத்து!

இந்திய வீரர்களின் பயிற்சிக்கு இடையூறு செய்த ரசிகர்கள்… பிசிசிஐ போட்ட தடா!

அதை நான் ஊடகங்களிடம் சொல்லக் கூடாது… பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஜாலியாகப் பேசிய கே எல் ராகுல்!

இரண்டாவது டெஸ்ட்டில் கோலி விளையாடுவாரா?... புகைப்படம் வெளியிட்டு அப்டேட் கொடுத்த பிசிசிஐ!

ராகுல் பற்றி எல்லோரும் பேசி இருக்கணும்.. ஆனால்? – ஆஸி வீரர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments