Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் ஓவரிலேயே ஸ்டெம்பை தெறிக்க விட்ட புவனேஸ்வர் குமார்: இந்தியா அசத்தல் ஆரம்பம்!

முதல் ஓவரிலேயே ஸ்டெம்பை தெறிக்க விட்ட புவனேஸ்வர் குமார்: இந்தியா அசத்தல் ஆரம்பம்!

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (15:28 IST)
மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதிப்போட்டியில் வென்று பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ள நிலையில் இந்தியா-வங்கதேச அணிகள் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் மோதி வருகிறது.


 
 
இந்தியா-வங்கதேச அணிகள் மோதும் இந்த போட்டி இன்று மதியம் 3 மணிக்கு பிர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார். இதில் இந்தியா சிறப்பாக பந்துவீசி அசத்தலாக விளையாடி வருகிறது.
 
வங்கதேசம் சார்பாக தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பாலும், சௌமியா சர்காரும் களமிறங்கினர். இந்தியாவின் ஸ்விங் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் 1 ரன் மட்டுமே வங்கதேசம் எடுத்தது. அதே நேரத்தில் ஓவரின் கடைசி பந்தில் சௌமியா சர்க்காரின் விக்கெட்டை வீழ்த்தினார் புவனேஸ்வர் குமார்.
 
புவனேஸ்வர் குமார் வீசிய பந்து வங்கதேச வீரரின் பேட்டில் பட்டு ஸ்டெம்பை பதம்பார்த்து தெறிக்கவிட்டது. இதன் மூலம் இந்திய அணி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொண்டது. மூன்று ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.

தொட்டதெல்லாம் தங்கமாக மாறும் மிடாஸ் மன்னனா பேட் கம்மின்ஸ்?.. அடுத்தடுத்து வென்ற கோப்பைகள்!

இப்போது கொண்டாட்டங்களுக்கு இடமில்லை…. ஆட்டநாயகன் விருது பெற்ற ஷபாஸ் அகமது!

உலகக் கோப்பையில் இந்திய அணியில் யாரை எடுக்கலாம்?... ப்ளேயிங் லெவன் அணியை அறிவித்த யுவ்ராஜ்!

“உலகக் கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புள்ளது”- ஆஸி முன்னாள் வீரர் கருத்து!

நான் தடுமாறிய போது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக் – கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments