Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள்… சாதனைப் படைத்த பென் ஸ்டோக்ஸ்!

Webdunia
சனி, 18 பிப்ரவரி 2023 (11:10 IST)
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் தூணாக விளங்கி வருகிறார் ஸ்டோக்ஸ். 50 ஓவர் இறுதிப் போட்டி மற்றும் 20 ஓவர் இறுதிப் போட்டி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து கோப்பையை வெல்ல முக்கியக் காரணியாக இருந்தார்.

இந்நிலையில் இப்போது டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு, அணியை ஆக்ரோஷமான வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் இப்போது நியுசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். 109 சிக்ஸர்களோடு அவர் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் நியுசி முன்னாள் வீரர் மெக்கல்லம் 107 சிக்சர்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

அடுத்தடுத்த இடங்களில் கில்கிறிஸ்ட், கெய்ல் மற்றும் காலீஸ் ஆகியோர் 100, 98 மற்றும் 97 சிக்ஸர்களோடு அடுத்த இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் ஷர்மாவை அடுத்து ஜெய்ஸ்வால் & கில் எடுத்த அதிரடி முடிவு!

கம்பீரின் பயிற்சியாளர் பொறுப்பு மறுபரிசீலனைக்கு உள்ளாகிறதா?..

திருப்பதி கோவிலுக்கு முட்டிப்போட்டு ஏறிய நிதிஷ்குமார் ரெட்டி! - நேர்த்திக்கடன் வீடியோ வைரல்!

உள்ளூர் கிரிக்கெட்டுக்குத் திரும்பும் ரோஹித் ஷர்மா… மும்பை அணியோடு பயிற்சி!

கோலிக்குப் பிடிக்கவில்லை என்றால் அணியில் இருக்கமுடியாது… ராபின் உத்தப்பா குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments