Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

vinoth
சனி, 15 பிப்ரவரி 2025 (08:09 IST)
வரும் 19 ஆம் தேதி தொடங்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பின்னர் பிசிசிஐ மற்றும் ஐசிசி கொடுத்த நெருக்குதால் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒத்துக் கொண்டது. அதனால் இந்தியா அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடத்தப்படவுள்ளன.

இங்கிலாந்து தொடரை முடித்துள்ள இந்திய அணி வரும் 15 ஆம் தேதி துபாய்க்குப் பயணம் செய்ய உள்ளது. அங்கு இந்திய அணிக்குப் பயிற்சிப் போட்டிகள் எதுவும் கிடையாது என சொல்லப்படுகிறது. இதனால் இந்திய அணி வலைப்பயிற்சி போன்ற பயிற்சிகளில் மட்டும் ஈடுபடும் என தெரிகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கு செல்லும் இந்திய அணியினருடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம். ஏனென்றால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் கம்பீரின் உதவியாளரை இந்திய அணியினரோடு தங்க பிசிசிஐ அனுமதிக்கவில்லை. அதனால் கம்பீரின் சொந்த செலவில் அவர் வேறு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கௌதம் கம்பீருக்குமா கட்டுப்பாடு… கறாராக சொன்ன பிசிசிஐ!

இலங்கையிடம் ஒருநாள் போட்டி தொடரை இழந்த ஆஸ்திரேலியா.. ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளியா?

என்னை கிங் என்று அழைக்காதீர்கள்… பாபர் ஆசம் வேண்டுகோள்!

இப்போதைக்கு ரிஷப் பண்ட்டுக்கு தேவை இல்லை… சூசகமாக பதில் சொன்ன கம்பீர்!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்.. முதல் போட்டி பெங்களூரு குஜராத்

அடுத்த கட்டுரையில்
Show comments