Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’என்னை மன்னித்து விடுங்கள்’ - சிறுமியை சித்ரவதை செய்த கிரிக்கெட் வீரர்

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2016 (17:29 IST)
இந்த 11 வயது சிறுமியை துன்புறுத்திய வழக்கில், தான் தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு வழங்குமாறு வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹொசைன் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
பங்களாதேஷின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான, ஷஹாதத் ஹொசைன் [29]. இவர் தனது வீட்டுப் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தியிருந்த ஒரு சிறுமியை, சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது.
 
இந்த 11 வயது சிறுமி உடலில் பல காயங்கள் மற்றும் கால் முறிந்ததை மருத்துவர்கள் உறுதி செய்த பின்னர், இவர்கள் இருவரும் தலைமறைவாயினர். பின்னர், ஷஹாதத் ஹொசைன் காவல் துறையினரிடம் சரணடைந்தார்.
 
மேலும், அவர் கோரியிருந்த ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மனைவியும் கைது செய்யப்பட்டார்.
 
இதனையடுத்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஷஹாதத் ஹொசைனை இடைநீக்கம் செய்தது. இந்நிலையில், தான் தவறு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரி வங்கதேச கிரிக்கெட் சங்கத்திடம் முறையிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக அவர் கூறுகையில், ”நான் செய்த அந்த விரும்பத்தகாத செயலுக்காக மிகவும் வருந்துகிறேன், இதற்காக ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய தவறைத் திருத்திக் கொள்வதற்கும் மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
 
38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷஹாதத் ஹொசைன் 72 விக்கெட்டுகளையும், 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 47 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்.....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments