Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷுப்மன் கில் தமிழராக இருந்தால் இந்நேரம் தூக்கப்பட்டிருப்பார்… பத்ரிநாத் விமர்சனம்!

vinoth
செவ்வாய், 7 ஜனவரி 2025 (10:11 IST)
கடந்த ஆண்டு நடந்து முடிந்த டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்குக் கூட தேர்வாகாத ஷுப்மன் கில் தற்போது ஒருநாள் மற்றும் டி 20 அணிகளுக்கான துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர்தான் எதிர்கால இந்திய அணியின் கேப்டனாக வரப்போகிறார் என்பதை நாம் சூசகமாக புரிந்து கொள்ளலாம்.

ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் மிகச்சிறப்பாக விளையாடி வரும் கில் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் அவர் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சுப்மன் கில் பற்றி பேசியுள்ள முன்னாள் வீரர் பத்ரிநாத் “ஷுப்மன் கில் தமிழ்நாட்டு வீரராக இருந்தால் இந்நேரம் அணியை விட்டு தூக்கப்பட்டிருப்பார்.  ஒரு வீரர் ரன் குவிக்கலாம் அல்லது அவுட் ஆகி வெளியேறலாம். ஆனால் அவர் எந்த முனைப்பும் இல்லாமல் விளையாடுகிறார். குறைந்த பட்சம் 100 பந்துகளையாவது எதிர்கொண்டு பவுலர்களையாவது கலைப்படைய வைக்கலாம்.” எனக் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

அடுத்த கட்டுரையில்
Show comments