Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறுவை சிகிச்சைக்கு தயாராகும் கிறிஸ் கெய்ல்

அறுவை சிகிச்சைக்கு தயாராகும் கிறிஸ் கெய்ல்
, சனி, 25 ஜூலை 2015 (09:58 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான கிறிஸ் கெய்ல் முதுகுவலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் சிக்சர் மன்னன் முதுகுவலி காயத்தால் அவதிபட்டு வருகிறார். இதற்காக விரைவில் கெய்ல்  அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து கெய்ல் கூறுகையில், வரும் நாட்களில் தொண்டு நிறுவன கிரிக்கெட் போட்டியில் பங்குபெறவுள்ளேன்.
 
அப்போட்டி தொடர் முடிந்தபிறகு முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை செய்யவுள்ளேன் என்றார். மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு உரிய ஓய்வு தேவைப்படும். எனவே சுமார் 3 மாதங்கள் வரை எவ்வித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட முடியாது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil