Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி வாய்ப்ப பத்தி இப்போ பேசமுடியாது.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (07:00 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய தென் ஆப்பிரிக்கா பரபரப்பான திரில் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் பலவீனமாகியுள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் “நாங்கள் களத்தில் மிகச்சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். போட்டியில் டி ஆர் எஸ் முறையும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியாக நாங்கள் அப்பீல் செய்த விக்கெட்டுக்கு நடுவர் விக்கெட் கொடுத்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும். இப்போதைக்கு நாங்கள் அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியாது. அடுத்த மூன்று போட்டிகளையும் வென்ற பிறகு பிற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments