Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பேக் கொடுப்பதற்கு இந்தியாதான் சிறந்த அணி.. ஆஸி கேப்டன் மிட்செல் மார்ஷ் நம்பிக்கை!

Webdunia
திங்கள், 24 ஜூன் 2024 (07:00 IST)
உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றுகள் நடந்து வரும் நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதிர்ச்சி முடிவாக ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்களை இழந்து 148 ரன்கள் சேர்த்தது.

இந்த தோல்வியால் ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்வது சிக்கலாகியுள்ளது. இதையடுத்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் ஆஸி தோற்று, ஆப்கானிஸ்தான் அணி பங்களாதேஷை வென்றால் ஆஸி அணி உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும். அதனால் இந்தியாவுக்கு எதிரான போட்டியை வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது ஆஸ்திரேலியா.

இந்நிலையில் இந்திய அணியுடன் நடக்கும் போட்டியில் வெற்றி பெறுவது குறித்து பேசியுள்ள மிட்செல் மார்ஷ், “இந்தியாவுக்கு எதிரான போட்டியில் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆகவேண்டும். கம்பேக் கொடுப்பதற்கு இந்தியாவை விட வேறு சிறந்த அணி இல்லை.” எனக் கூறியுள்ளார். உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை வீழத்திய ஆஸி அணியை பழி தீர்க்க இந்த போட்டி சரியானதாக இருக்கும் என ரசிகர்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

“இராணுவ வீரர்களுக்குத் துணை நிற்போம்..” விராட் கோலி பதிவு!

“நாடுதான் முக்கியம்… மற்ற விஷயங்கள் எல்லாம்…” – ஐபிஎல் ஒத்திவைப்பு சம்மந்தமாக சிஎஸ்கே பதிவு!

ரோஹித் ஷர்மாவின் ஓய்வுக்கு பிசிசிஐ அழுத்தம்தான் காரணமா?... ராஜீவ் சுக்லா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments