Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது இந்தியா; 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது இந்தியா; 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
, வியாழன், 26 மார்ச் 2015 (17:55 IST)
உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.
 
ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
 
உற்சாகத்தில் ஆஸ்திரேலிய அணியினர்
அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் வார்னர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேறினார். அற்புதமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் 89 பந்துகளில் [10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] சதம் விளாசினார்.
 
அதேபோல மற்றொரு தொடக்க வீரரான ஆரோன் பிஞ்ச் 5 பவுண்டரிகள் உட்பட அரைச்சதம் எடுத்தார். பின்னர் சிறிது நேரத்தில் ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்கள் [11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] எடுத்த நிலையில் அவுட்டானார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 182 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
 
webdunia

 
பிறகு களமிறங்கிய மேக்ஸ்வெல் வழக்கம்போல அதிரடியில் ஈடுபட்டார். ஆனால் அதிகநேரம் தாக்குப்பிடிக்க்கவில்லை. அவர் 14 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் 81 ரன்கள் குவித்து வெளியேறினார். கேப்டன் கிளார்க்கும் 10 ரன்களில் வெளியேறினார்.
 
197 ரன்களுக்கு 2 விக்கெட்டை மட்டுமே இழந்திருந்த ஆஸ்திரேலியா 248 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் ஆட்டம் இந்தியாவின் கட்டுக்குள் வருவதுபோல் இருந்தது. ஆனால் ஃபால்க்னரும், வாட்சனும் விக்கெட் வீழ்ச்சியை தடுத்தனர். ஃபால்க்னர் அதிரடியாகவும் ஆடினார். அவர் 12 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
webdunia
அதிரடியாக ஆடிய மிட்செல் ஜான்சன்
பிறகு வாட்சன் 30 பந்துகளில் 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். கடைசியாக இறங்கிய மிட்செல் ஜான்சன் தான் சந்தித்த முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு ஓடவிட்டார். இதனால் ஆஸ்திரேலிய 300 ரன்களை கடந்தது.
 
50 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 328 ரன்கள் குவித்தது. ஜான்சன் 9 பந்துகளில் [4 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 27 ரன்கள் எடுத்தார். ஹாடின் 7 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இந்தியா தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

பிறகு களமிறங்கிய இந்திய அணியில் ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா சிறப்பான தொடக்கம் அளித்தனர். ஷிகர் தவான் 41 பந்துகளில் [6 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த விராட் கோலி 13 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
webdunia
சிறப்பான துவக்கம் அளித்த ஷிகர் தவான்
அடுத்து ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேறினார். சுரேஷ் ரெய்னாவும் 7 ரன்கள் எடுத்து வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய ரஹானேவும், தோனியும் அணியை வீழ்ச்சியிலிருந்து தடுத்தனர். இருவரும் இணைந்து 70 ரன்கள் எடுத்தனர்.
 
இந்நிலையில் ரஹானே 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜாவும் 16 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். நிலைத்து நின்று ஆடிய தோனி 55 பந்துகளில் [3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 50 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
webdunia

 
43 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது 42 பந்துகளில் 106 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் தோனி இருந்ததால் வெற்றிபெற வாய்ப்பிருந்த நிலையில் தோனி 65 பந்துகளை சந்தித்து [ [3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] எடுத்து வெளியேற மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கிளம்ப ஆரம்பித்தனர்.
 
webdunia
விக்கெட் வீழ்ந்ததும் ஆர்ப்பரிக்கும் மிட்செல் ஜான்சன்
அதன் பிறகு அஸ்வின் 5, மொஹித் சர்மா 0, உமேஷ் யாதவ் 0 ரன்னில் வெளியேற இந்திய அணி 46.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலியா தரப்பில் ஃபால்க்னர் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஜான்சன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருதை 105 ரன்கள் குவித்த ஸ்டீவ் ஸ்மித் பெற்றார்.

Share this Story:

Follow Webdunia tamil