Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
, சனி, 6 ஜூன் 2015 (11:26 IST)
டொமினிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றுள்ளது.
டொமினிக்காவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 318 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.
 
பின்னர் தனது 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிபடுத்தி 216 ரன்களில் ஆட்டமிழந்தது. பின்னர் 47 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடியது ஆஸ்திரேலிய அணி. இறுதியில் ஆஸ்திரேலிய அணி 5 ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

Share this Story:

Follow Webdunia tamil