Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டீவ் ஸ்மித் அபார சதத்தால் முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்த ஆஸ்திரேலியா…!

vinoth
வெள்ளி, 27 டிசம்பர் 2024 (08:26 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நேற்று நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸி அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யப் போவதாக அறிவித்தார்.

ஆஸி அணியின் தொடக்க பேட்ஸ்மேன்கள் நான்கு பேரும் மிகச்சிறப்பான இன்னிங்ஸை ஆடினர். அதில், சாம் கோன்ஸ்டாஸ் 60 ரன்கள், உஸ்மான் கவாஜா 57 ரன்கள், லாபுசாஞ்சே 72 ரன்கள்  ரன்கள் அடித்துள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்து அசத்தினார். இதன் காரணமாக ஆஸ்திரெலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

இந்திய அணி சார்பாக பும்ரா 4 விக்கெட்களையும், ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.  ஆகாஷ் தீப் 2 விக்கெட்களையும் வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments