Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வார்னரின் 178 தாண்டாத ஆஃப்கானிஸ்தான்; 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

வார்னரின் 178 தாண்டாத ஆஃப்கானிஸ்தான்; 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி
, புதன், 4 மார்ச் 2015 (19:42 IST)
இன்றைய உலகக் கோப்பைப் போட்டியில், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிராக, ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
 
உலகக் கோப்பை போட்டியின் 26ஆவது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணுகளுக்கிடையே பெர்த்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
 
இதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் ஆரோன் பிஞ்ச் 4 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித்தும், வார்னரும் ஜோடி சேர்ந்து ஆஃப்கானிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.
 

 
நாளாபுறமும் பந்துகளை ஓடவிட்ட டேவிட் வார்னர் 92 பந்துகளில் [11 பவுண்டரிகள்] சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வார்னர் அபாரமாக ஆடி 133 பந்துகளில் [19 பவுண்டரிகள், 5 சிக்சர்கள்] 178 ரன்களை எடுத்து வெளியேறினார்.
 
வார்னர், ஸ்மித் ஜோடி 2 வது விக்கெட்டுக்கு 260 ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக களம் இறங்கிய மேக்ஸ்வெல் ஆரம்பம் முதலே தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார். இதனால் அவர் 21 பந்துகளில் 50 ரன்களை குவித்தார்.
 
இதற்கிடையே, ஸ்மித் 98 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து வெளியேறினார். 39 பந்துகளில் 7 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உட்பட 88 ரன்கள் எடுத்த நிலையில் மேக்ஸ்வெல் ஆட்டமிழந்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ஃபால்க்னர், மார்ஷ் அடுத்தடுத்து வெளியேறினர்.
 
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 417 ரன்களை குவித்தது. ஆஃப்கானிஸ்தான் தரப்பில் தவ்லத் சட்ரன், ஷபூர் சட்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். உதிரி வகையில் 17 ரன்கள் ஆஃப்கானிஸ்தான் விட்டுக் கொடுத்தது.
 
மேலும் அடுத்தப் பக்கம்...

இதையடுத்து 418 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜாவித் அஹ்மதி 13 ரன்களிலும், உஸ்மான் கானி 12 ரன்களிலும், அஸ்கர் ஸ்டானிக்சை 4 ரன்களிலும், ஷமியுல்லா ஷென்வாரி 17 ரன்களிலும்  வெளியேறினர்.
 
சிறிது நேரம் தாக்குப் பிடித்த நவ்ரோஸ் மங்கள் 33 ரன்களில் வெளியேறினார். முகமது நபி 2 ரன்களில் வெளியேற 103 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. இதனால் அந்த அணியின் வீழ்ச்சி தவிர்க்க முடியாததாயிற்று.
 
webdunia

 
நஜிபுல்லா சட்ரன் 24 ரன்கள் எடுத்தார். கடைசியில் களமிறங்கிய எவரும் நிலைத்து நின்று ஆடாததால் ஆஃகானிஸ்தான் அணி 37.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்கள் மட்டும் எடுத்தது.
 
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா தரப்பில் மிட்செல் ஜான்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது 178 ரன்கள் குவித்த டேவிட் வார்னருக்கு வழங்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil