Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் அஸ்வின்

இந்த ஆண்டு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தில் அஸ்வின்
, சனி, 28 நவம்பர் 2015 (08:59 IST)
இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களில் பட்டியலில் தமிழக கிரிக்கெட் வீரரான அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
 

 
 
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் மொத்தம் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் அஸ்வின் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் 8 டெஸ்ட் போட்டியில் விளையாடி 55 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். 2வது இடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் உள்ளார். இவர் 13 டெஸ்டில் 51 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
 
டெஸ்டில் அவர் 10க்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்துவது நேற்று நடைபெற்ற போட்டியைச் சேர்த்து 4வது முறையாகும். அஸ்வின் இதுவரை 31 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். இதில் 169 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.

15 முறையாக ஒரு இன்னிங்சில் 5 மற்றும் அதற்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் முதல் 31 டெஸ்டுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகளை சாய்த்த சுழற்பந்து வீச்சாளரான ஆஸ்திரேலியாவின் கிளாரி கிரிம்மெட்டின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil