Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளரே இல்லை… TNPL கோப்பையை வென்ற பிறகு அஸ்வின் பேச்சு!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (09:59 IST)
கடந்த சில வாரங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி 52 ரன்கள் சேர்த்தார். 18.2 ஓவர்களில் திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “இந்த வெற்றி ஒரு வேகத்தில் நடந்ததுதான். இத்தொடரின் ஆரம்பம் எங்களுக்கு சரியாக அமையவில்லை. சேலம் அணியிடம் தோற்ற ஒரே அணி நாங்கள்தான். அதன் பிறகு நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்பினோம். இந்த வெற்றிக்கு சரத்குமாரின் பங்களிப்பு அதிகம். அவர் மைதானத்தின் எந்த பக்கத்தில் நிறுத்தினாலும் ஜாண்ட்டி ரோட்ஸ் போல ஃபீல்ட் செய்தார். இந்த அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கூட இல்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் கூட என் நண்பர்கள்தான்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் வெளியேறுவோம்.. ஐதராபாத் அணி எச்சரிக்கை..!

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

அடுத்த கட்டுரையில்
Show comments