Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடர்: அணி வீரர்கள் அறிவிப்பு

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் தொடர்: அணி வீரர்கள் அறிவிப்பு
, சனி, 4 அக்டோபர் 2014 (23:51 IST)
இந்தியா - மேற்கு இந்திய அணிகளுக்கு இடையே 5 ஒரு நாள், 1 டி-20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ஒருநாள் தொடருக்கான வீரர்கள் பட்டியலை இரு அணிகளும் அறிவித்துள்ளன.
 
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் தொடர் அக்டோபர் 8ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன், விதிமுறைக்கு மாறாகப் பந்துவீசுவது தொடர்பாக எழுந்த புகாரினால் தொடரில் இருந்து நீக்கப்பட உள்ளார்.

ஏற்கனவே அதிரடி பேட்ஸ்மேன் கிரிஸ் கெய்ல் விளையாடாத நிலையில் சுனில் நரைனும் விளையாடாதது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
 
இந்திய அணியில் காயம் காரணமாக ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் முதல் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக முரளி விஜய் மற்றும் குல்தீப் சிங் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil