Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் விக்கெட்டை சாய்த்த அஸ்வின்… ஆஸி அணி தடுமாற்றம்!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (10:06 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். கடைசி கட்டத்தில் கோலி, இரட்டை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நைட் வாட்ச்மேனாக இறங்கிய குன்னமேனை அஸ்வின் அவுட் ஆக்கி வெளியேற்றினார். ஆஸி. பேட்ஸ்மேன்கள் மிகவும் டிபன்ஸிவ்வாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது வரை ஆஸி அணி 17 ரன்கள் சேர்த்து 1 விக்கெட்டை இழந்து ஆடி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments