Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை சிறந்த அணியில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்த அஸ்வின்… ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2025 (14:29 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியேக் காணாமல் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையைக் கைபற்றி அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், வருண் சக்ரவர்த்தி, ஷமி என எனப் பலரும் சிறப்பாக பங்காற்றினார். கடைசி போட்டியில் ரோஹித் ஷர்மா சிறப்பாக அடி அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்நிலையில் ஐசிசி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு கனவு அணியை உருவாக்கியுள்ளது அந்த அணியில் இந்திய அணியின் கோலி உள்ளிட்ட ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் அஸ்வின் வெளியிட்ட சிறந்த அணியிலும் ரோஹித் ஷர்மாவுக்கு இடமளிக்கவில்லை. இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடாவிட்டாலும் அணியை சிறப்பாக வழிநடத்தி, இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் அறிவித்த அணி
ரச்சின் ரவீந்தரா, பென் டக்கெட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்க்லீஷ், டேவிட் மில்லர், ஓமர்சாய், மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, மேட் ஹென்றி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை சிறந்த அணியில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்த அஸ்வின்… ரசிகர்கள் அதிருப்தி!

கோலி எப்போதும் எனக்கு ஆதரவாகதான் இருந்தார்.. அவரால் என் இடம் பறிபோகவில்லை – ராயுடு பதில்!

ஐபிஎல் விளையாட ஹாரி ஃப்ரூக்குக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்த பிசிசிஐ!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு இவர்தான் கேப்டன்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பாகிஸ்தானுக்கு ஐசிசி கண்ணாடியைக் காண்பித்துள்ளது… முன்னாள் வீரர் காட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments