114 ஆண்டு கால சாதனையை எட்டிய அஸ்வின்! – முதல் பந்திலேயே விக்கெட்!

Webdunia
திங்கள், 8 பிப்ரவரி 2021 (14:12 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் அஸ்வின் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் சென்னையில் நடந்து வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்களும், இந்தியா 337 ரன்களும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கி நடந்து வரும் நிலையில் இங்கிலாந்து அணி 25 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடக்கத்தில் முதல் ஓவரில் முதல் பந்து வீசிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இங்கிலாந்து வீரர் ஜோசப் பர்ன்ஸ் விக்க்கெட்டை வீழ்த்தினார். கடந்த 114 ஆண்டுகால கிரிகெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸின் முதல் ஓவரின் முதல் பந்தில் விக்கெட் வீழ்த்திய முதல் சுழற்பந்து வீச்சாளர் என அஸ்வின் இதன்மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 ஆண்டுகளுக்குப் பிறகு பிக்பாஷ் தொடரில் களமிறங்கும் மிட்செல் ஸ்டார்க்!

ஓய்வு பெற கட்டாயப்படுத்தப்பட்டாரா அஸ்வின்.. அவரே சொல்லும் உண்மை..!

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்.. இந்தியா 3வது இடம்.. ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்தில் பாகிஸ்தான்..!

58 கோடி தர்றோம்…ஆஸி அணியில் இருந்து ஓய்வு பெறுங்க… பேட் கம்மின்ஸுக்கு ஆஃபர் கொடுத்த ஐபிஎல் அணி!

பில்லியனர் ஆன முதல் விளையாட்டு வீரர் என்ற சாதனையைப் படைத்த ரொனால்டோ!

அடுத்த கட்டுரையில்
Show comments