வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் ? – அஸ்வின் கருத்து

Webdunia
சனி, 1 டிசம்பர் 2018 (08:16 IST)
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் போட்டி குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்தியா அணி மூன்று மாத நீண்ட சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. அதில் முதலில் நடந்து முடிந்த டி 20 தொடர் சமனில் முடிந்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கும் இடையில் பயிற்சி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் சிறப்பாக ரன் குவித்து பலப்பரிட்சை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் இந்திய சுழற்பந்து வீச்சாளற் அஸ்வின் ஆஸ்திரேலியத் தொடரில் சிறப்பாக செயல்படுவது குறித்து நேற்று பேட்டியளித்துள்ளார். அதில் ‘ஆஸ்திரேலியா ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என கருதுகிறேன். எனவே பவுலிங்கில் நாம் சிறப்பான கூட்டணி அமைத்து செயல்பட வேண்டியது முக்கியமாகும். அதேப் போல தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்துவதும் முக்கியமாகும். நான் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியுள்ளேன். அந்த தொடர் எனது கிரிக்கெட்  வாழ்க்கையில் முக்கியமான தொடராகும். அந்த அனுபவம் தற்போது எனக்கு கைகொடுக்கும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments