Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கம்பீரின் ஆலோசனைகளை பின்பற்றும் ஆஸ்திரேலிய சுழல்

கம்பீரின் ஆலோசனைகளை பின்பற்றும் ஆஸ்திரேலிய சுழல்
, புதன், 29 ஜூலை 2015 (16:44 IST)
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளரான ஆஷ்டன் அகர், கவுதம் கம்பீர் வழங்கிய சில ஆலோசனைகளை பின்பற்றவுள்ளார். 
இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி ஒருவழியாக டிராவில் முடிந்தது. மேலும் இரு அணிகள் மோதும் 2 ஆவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்து வருகிறது. இத்தொடரில் ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஓரங்கட்டபட்ட சுழல் பந்துவீச்சாளரான ஆஷ்டன் அகர் ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். 
 
தொடர் அனுபவம் குறித்து ஆஷ்டன் அகர் கூறுகையில், சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி விரைவில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். மேலும் பந்துவீச்சை மேம்படுத்த இந்திய வீரர் கம்பீரிடம் சில ஆலோசனைகள் கேட்டுள்ளேன். ஏனெனில் கம்பீர் சுழல் பந்துவீச்சை நேர்த்தியாக கையாளகூடியவர். எனவே கம்பீரின் ஆலோசனைகளை பின்பற்ற திட்டமிட்டுள்ளேன் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil