மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மேலும் ஒரு வீரர் விலகல்… ஆஸி அணிக்குப் பின்னடைவு!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (08:27 IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமாகியுள்ளது. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் ஆஸிக்கு திரும்பியுள்ளார். அவரால் மூன்றாவது டெஸ்ட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஆஸி. அணியின் ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகார் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும், அந்த தொடருக்காக ஆஸ்திரேலியா திரும்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் தாக்குதலில் 3 ஆப்கன் கிரிக்கெட் வீரர்கள் பலி.. முத்தரப்பு தொடரில் இருந்து விலகல்..!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸி அணிக்குப் பின்னடைவு… அடுத்தடுத்து விலகும் வீரர்கள்!

2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன்…. ரோஹித் ஷர்மா உறுதி!

ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விராத் கோஹ்லி, ரோஹித் சர்மா நீக்கப்படுவார்களா? அஜித் அகர்கர் பதில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments