ஆஷஸ் டெஸ்ட்… முதல் நாளில் ஆல் அவுட் ஆன இங்கிலாந்து!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2023 (07:50 IST)
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஆஷஸ் தொடர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் கடைசியாக நடந்த நான்காவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது.  இந்த போட்டியில் வெல்லும் நிலையில் இருந்தது இங்கிலாந்து. ஆனால் மழைக் காரணமாக போட்டி பாதிக்கப்பட்டு டிரா ஆனது.

இந்நிலையில் நேற்று ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டன் மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு முதல் நாளில் ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் மட்டுமே நிலைத்து நின்று அதிகபட்சமாக 85 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸி. சார்பாக மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி. அணி முதல் நாள் ஆட்டமுடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

358 ரன்கள் எடுத்தும் தோல்வி ஏன்? கேப்டன் கே.எல்.ராகுல் கூறும் காரணம்..!

அதிக சதமடித்து சாதனை: சச்சின் சாதனையை முறியடித்த விராத் கோஹ்லி..

கோஹ்லி, ருத்ராஜ் சதம் வீண்.. கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி..

கோலி, ருத்ராஜ் சதம்.. கே.எல்.ராகுல் அரைசதம்.. 350 ரன்களை தாண்டிய இலக்கு..!

ருத்ராஜ் அபார சதம்.. சதத்தை நெருங்கிய விராத் கோலி.. இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments