அஸ்வினை எளிதாக ஆட்டத்தில் இருந்து புறந்தள்ளிவிட முடியாது… அனில் கும்ப்ளே பாராட்டு!

vinoth
திங்கள், 26 பிப்ரவரி 2024 (07:55 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் தற்போது ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியின் விளிம்பில் உள்ளது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 152 ரன்களே தேவை. கைவசம் 10 விக்கெட்கள் உள்ளன. நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பந்துவீசிய போது அஸ்வின்  5 விக்கெட்கள் அசத்தினார்.

இதன் மூலம் அவர்  இந்திய மைதானங்களில் 352 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் அனில் கும்ப்ளே 350 விக்கெட்கள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. நேற்று அஸ்வின் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 35 ஆவது முறையாக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அனில் கும்ப்ளேவும்  35 முறை இதே சாதனையைப் படைத்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே “அஸ்வின் போன்ற வீரரை நாம் எளிதாக ஆட்டத்தில் இருந்து புறம் தள்ளிவிட முடியாது. அவர் இன்னும் சில ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி என்னுடைய சாதனை உள்ளிட்ட பல சாதனைகளை முறியடிக்க வேண்டும். அவரால் இன்னும் சில ஆண்டுகள் கண்டிப்பாக கிரிக்கெட் விளையாட முடியும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. நமீபியாவுக்கு எதிராக போட்டியில் இந்தியா அசத்தல்...!

93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி.. ஏ பிரிவில் முதலிடம்..

ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராக தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு: தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு..!

உலகக்கோப்பை டி20.. SA vs AFG.. சூப்பர் ஓவரிலும் சமமான ரன்கள்.. 2வது சூப்பர் ஓவரில் நடந்த அதிசயம்..

ராகுல்காந்தியை சந்தித்த சச்சின்.. பிரதமர் மோடியை சந்தித்த ஜடேஜா! இருவருக்கும் என்ன காரணங்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments