Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதைமருந்து உட்கொண்ட ஆண்ட்ரூ ரஸ்ஸலுக்கு ஓர் ஆண்டு தடை

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (17:56 IST)
சர்வதேச விதிமுறையை மீறி போதைமருத்து பயன்படுத்திய மேற்கிந்திய தீவு அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு ஓர் ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.


 

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியை அவ்வளவு எளிதில் இந்திய ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. இந்திய அணி 20 ஓவர்களில் 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி 19.4 ஓவர்களில் 196 ரன்கள் எடுத்து இந்திய அணியின் கோப்பைக் கனவை சிதைத்தது.

இதில் சிம்மன்ஸ் 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். ஆண்ட்ரே ரஸ்ஸல் வெறும் 20 பந்துகளில் [3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்] 43 ரன்கள் விளாசித் தள்ளினார். கடைசி 6 ஓவர்களுக்கு 73 ரன்கள் தேவை என்றபோதும் வெளுத்து வாங்கினார்கள். ரஸ்ஸல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த ரஸ்ஸல் தான் தற்போது ஊக்கமருந்து சோதனையில் சிக்கி ஓராண்டு தடை பெற்றுள்ளார். பிக்பாஷ் கிரிக்கெட் லீக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற 5 போட்டிகளில் அவர் பங்கேற்றார். அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஊக்கமருத்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து, சர்வதேச ஊக்க மருத்து தடுப்பு மையத்தின் தலைமை அதிகாரி ஹக் ஃபால்க்னரின் அறிக்கைப்படி ஜனவரி 31-ம் தேதி முதல் அவருக்கு ஓர்ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் சிட்னி தண்டர் அணியின் இயக்குநருமான மைக் ஹஸி கூறுகையில், “அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர் உண்மையிலேயே கடினமான காலக்கட்டத்தில் உள்ளார். இதிலிருந்து அவர் வெளியேற வேண்டும் என நினைக்கிறேன். மேலும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கூட நல்ல நிலைமையை பெற வேண்டும்” என்றார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பந்தைக் கணிப்பதில் கோலியிடம் பிரச்சனை…. சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

4வது டி20 போட்டியிலும் வெற்றி.. தொடரை வென்றது இந்தியா.. சொந்த மண்ணில் தெ.ஆ. பரிதாபம்..

ஐபிஎல் ஏலத்தில் கலந்துகொள்ளும் 13 வயது சிறுவன்… யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி!

யார் சாமி இவரு.. ஒரே ஆளாக 10 விக்கெட்டையும் தட்டித் தூக்கிய அன்ஷுல் கம்போஜ்! - மிரண்டு போன மைதானம்!

விராட் கோலிக்கு என்ன ஆச்சு?... திடீரென நடந்த மருத்துவப் பரிசோதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments