Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க சென்ற மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமெரிக்காவில் மரணம்!

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (07:32 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்தது. இந்த போட்டியை காண பிசிசிஐ மற்றும் பல மாநில அணி நிர்வாகிகள் அமெரிக்காவுக்கு சென்றனர். அதில் மும்பை கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் அமோல் காலேவும் ஒருவர்.

போட்டியைப் பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய அவர், மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

பொறியியல் பட்டதாரியான அமோல், மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர். மும்பை வாரியம் நடத்தும் போட்டிகளில் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கியும், மும்பை வான்கடே மைதானத்தைப் புதுப்பித்தும் நற்பெயரைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

“நான் டாஸ் போட வரும்போது…” –மும்பை ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்த ஹர்திக்!

கோலியின் சகவீரர் நடுவராக ஐபிஎல் 2025 சீசனில் அறிமுகம்..!

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 58 கோடி ரூபாய் பரிசறிவித்த பிசிசிஐ!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குக் கேப்டன் ஆகும் ரியான் பராக்… சஞ்சு சாம்சனுக்கு என்ன ஆச்சு?

வெளிநாட்டுத் தொடரில் வீரர்களுடன் குடும்பத்தினர் தங்கும் கட்டுப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.. பிசிசிஐ தடாலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments