Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

vinoth
வெள்ளி, 8 நவம்பர் 2024 (10:33 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் அந்த அணியின் அல்ஸாரி ஜோசப், அணிக் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதம் செய்து மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஜோசப் ஒரு ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார். ஆனாலும் ஃபீல்டிங் செட் செய்வதில் அவருக்கும் ஹோப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஜோசப் பெவிலியனுக்குத் திரும்பினார். பின்னர் அவர் திரும்பி வந்து தனது ஓவர்களை வீசினார்.

ஆனால் அல்சாரி ஜோசப் வெளியே சென்ற போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ஓவரில் 10 வீரர்களோடு மட்டும் விளையாடியது. இந்நிலையில் அல்ஸாரி ஜோசப்பின் இந்த செயலைக் கண்டித்துள்ள கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அமைப்பு அவருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

இதையடுத்து  ‘ஆட்டத்தின் மீதான ஆர்வம் என்னை கட்டுப்பாட்டை இழக்க வைத்துவிட்டது. அதற்காக நான் கேப்டன், சக வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments