Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிராவோ அசத்தல்; தெ.ஆப்பிரிக்கா சொதப்பல் - வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

Webdunia
சனி, 25 ஜூன் 2016 (13:24 IST)
வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 

 

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
 
இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் எடுத்தது.
 
அந்த அணியில் அதிகப்பட்சமாக அபாரமாக ஆடிய டேரன் பிராவோ 103 பந்துகளில் [12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 102 ரன்கள் எடுத்தார். கீரன் பொல்லார்ட் 71 பந்துகளில் [7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 62 ரன்களும், கேப்டன் ஜாசன் ஹோல்டர் 46 பந்துகளில் [3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 40 ரன்களும் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், கிறிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 

 
பின்னர், களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 46 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 185 ரன்கள் மட்டுமே எடுத்து 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
 
அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களான குவிண்டன் டி காக் [6], ஃபாப் டு பிளஸ்ஸி [3], டி வில்லியர்ஸ் [2], ஹசிம் ஆம்லா 16, டுமினி [5], கிறிஸ் மோரிஸ் [7] என அடுத்தடுத்து வெளியேறியதால் திக்குமுக்காடியது. ஒரு கட்டத்தில் 65 ரன்களுக்குள் முக்கிய 6 விக்கெட்டுகளை இழந்தது.
 
இதனால், தென் ஆப்பிரிக்கா 100 ரன்களுக்குள்ளேயே சுருண்டு விடும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ஆபாந்தவனாக நின்ற பெஹார்டியன் 35 ரன்களும், வெய்ன் பார்னல் 28 ரன்களும் எடுத்து அணியின் மானத்தை காப்பாற்றினர்.
 
அதேபோல கடைசியில் களமிறங்கிய இம்ரான் தாஹிர் 32 ரன்களும், மோர்னே மோர்கல் 29 ரன்கள் எடுத்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் நரைன் மற்றும் கேப்ரியேல் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சச்சின் சாதனையை முறியடிக்க ஜெய்ஸ்வாலுக்கு ஒரு அருமையான வாய்ப்பு… செய்வாரா?

இந்தியாவுக்கே சென்று அவர்களை வெல்ல வேண்டும்… பாகிஸ்தான் முன்னாள் வீரரின் ஆசை!

கேப்டன் யார் என்பது குறித்து இன்னும் யோசிக்கவில்லை… ரிஷப் பண்ட்டுக்கு ஷாக் கொடுத்த சஞ்சய் கோயங்கா!

இந்திய வீரர்களை பயமுறுத்த ஆஸ்திரேலிய ஊடகங்க முயல்கின்றன… சுனில் கவாஸ்கர் காட்டம்!

ரோஹித் ஷர்மா ஆறாவது இடத்தில் விளையாட வேண்டும்… இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சொன்ன கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments